பிப்ரவரி மாதம் ரூ.1.68 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்

பிப்ரவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் 12.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-01 13:14 GMT

புதுடெல்லி,

2024 பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,68,337 கோடியாக உள்ளது கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023-ம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5% அதிகம் என்றும், இதற்கு உள்நாட்டு பரிவர்த்தனை பெருமளவு ஊக்கமளித்துள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.18.40 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தின் வசூலை விட 11.7% அதிகமாகும். அதேபோல், நடப்பு நிதியாண்டின் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஜி.எஸ்.டி. 13.9% அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக்கான ஜி.எஸ்.டி.யில் 8.5% அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஜி.எஸ்.டி. வரி வசூல் உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்