டெல்லியில் கனமழை - விமான சேவை பாதிப்பு

டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளது.

Update: 2023-11-28 02:04 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக காற்று மாசு சற்று குறைந்துள்ளது. அதேவேளை, கனமழை காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு வரவேண்டிய 16 விமானங்கள் கனமழை காரணமாக ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்