15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - உ.பி.யில் பயங்கரம்
உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டம் பிஹட் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அதேபகுதியை சேர்ந்த ஷொபியன் என்ற இளைஞரிடம் பழகியுள்ளார்.
இதனிடையே, கடந்த 6-ம் தேதி இரவு 10 மணியளவில் அந்த இளைஞர் சிறுமியை பார்க்க வேண்டும் என அழைத்துள்ளார். அப்போது இளைஞரின் பேச்சை கேட்டு சென்ற சிறுமியை கிராமத்திற்கு அருகே உள்ள மறைவான பகுதிக்கு ஷொபியன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பன் ஷாரூக் உடன் சேர்ந்து சிறுமியை ஷொபியன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து 2 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை விட்டு தலைமறைவான ஷொபியன், ஷாரூக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.