1,400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 5 பேர் சிக்கினர்

பெங்களூருவில் 1,400 கிலோ செம்மரக்கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-13 18:45 GMT

பெங்களூரு: பெங்களூருவில் 1,400 கிலோ செம்மரக்கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் சோதனை

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இஸ்கான் கோவில் அருகே செம்மரக்கட்டைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பெங்களூருவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

1,400 கிலோ கட்டைகள் பறிமுதல்

மேலும் அவர்கள் அந்த பகுதியில் நின்றுகொண்டு மரக்கட்டைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 1,400 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது. இதையடுத்து போலீசார் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 1,400 கிலோ செம்மரக்கட்டைகள், சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1,400 kg of sheep logs seized

Tags:    

மேலும் செய்திகள்