13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; 5 பேருக்கு வலைவீச்சு - அதிர்ச்சி சம்பவம்
13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டம் ஷங்கர்பூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டிற்கு அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருந்த 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கழிவறைக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.