பல்வேறு பிரச்சினைகளால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் 13 ஆயிரத்து 56 பேர் தற்கொலை

பல்வேறு பிரச்சினைகளால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் 13 ஆயிரத்து 56 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

Update: 2022-09-10 17:03 GMT

பெங்களூரு:

ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு நிமான்ஸ் சார்பில் நேற்று முன்தினம் உலக தற்கொலை தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டதாக நிமான்ஸ் டாக்டர்கள் கூறினர். அதில் கர்நாடகத்தில் 13 ஆயிரத்து 56 பேர் தற்கொலை செய்து உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் குடும்ப பிரச்சினை, தொழில் தொடர்பான பிரச்சினை, வேலையின்மை, காதல் விவகாரம், திருமண விவகாரம், போதை மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாதது உள்பட பல்வேறு காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.

நிகழ்ச்சியில் நிமான்ஸ் டாக்டர் சிவராம் வரம்பள்ளி பேசுகையில், கிராம, நகர்புறங்களில் தற்கொலைக்கான காரணங்கள் வேறுபட்டவைகளாக உள்ளன. தற்கொலையை தடுக்க மனநலம் மற்றும் சமூக மாற்றங்கள் தேவை. தற்கொலை செய்வதை தடுப்பது பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.நிமேஷ் ஜார்ஜ் என்பவர் கூறுகையில், தொழிலில் வருமானம் கிடைக்காததாலும், குடும்பத்தினரின் போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தாலும் சொந்தமாக தொழில் செய்பவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்