கேரளாவில் எலி காய்ச்சல் பாதிப்பால் நடப்பாண்டில் 121 பேர் உயிரிழப்பு

கேரளாவில் எலி காய்ச்சல் பாதிப்பால் நடப்பாண்டில் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2024-08-23 12:00 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் சமீப காலமாக எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நடப்பாண்டில் இதுவரை 1,916 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 1,565 பேருக்கு காய்ச்சல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு 21-ந்தேதி வரை, எலி காய்ச்சல் பாதிப்புக்கு 121 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 102 பேர் காய்ச்சலுக்கு பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு கேரளாவில் 121 பேர் எலி காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Full View


Tags:    

மேலும் செய்திகள்