ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 12 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 12 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2023-05-26 23:22 GMT

Tonk district collector Chinmayi Gopal

டோங்க்,

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

முன்னதாக வியாழக்கிழமை, டோங்க் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பயங்கரமான கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து டோங்க் மாவட்ட ஆட்சியர் சின்மயி கோபால் கூறும்போது, "புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

நாங்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம், விரைவில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவோம். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறோம். வீடுகள் சேதமடைந்தவர்கள் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்