சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நிலை பாதிப்பு- மருத்துவமனையில் அனுமதி
கோரேகானின் சேட்டிலைட் டவரில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.;
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புட்பாய்சன் காரணமாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது வெள்ளிக்கிழமையன்று சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட 12 பேரில் 9 பேர் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
ஆனால், அவர்கள் ஓட்டலில் சாப்பிட்டார்களா அல்லது தெருவோர கடையில் சாப்பிட்டார்களா? என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.