கேரளாவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்ட 11 அவசர சட்டங்கள் - கையெழுத்திடாமல் டெல்லி சென்ற கவர்னர்

நாளையுடன் காலாவதியாகும் 11 அவசர சட்டங்களுக்கு கையெழுத்திடாமல் கேரள கவர்னர் டெல்லி சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-07 12:05 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு மசோதா தாக்கல் செய்யப்படாத 11 அவசர சட்டங்களை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அவசர சட்டங்களின் பரிந்துரைக்கான காலக்கெடு வரும் திங்கள்கிழமை(நாளை) நிறைவடையும் நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக புதிய அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதுப்பிக்க முடிவு செய்யப்பட்ட 11 அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடாமல் கேரள மாநில கவர்னர் ஆரீஃப் முகமது கான் டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற கவர்னர், ஆகஸ்ட் 11 ஆம் தேதி கேரளா திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனால் நாளையுடன் காலாவதியாகும் 11 அவசர சட்டங்களுக்கு கையெழுத்திடாமல் கேரள கவர்னர் டெல்லி சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்