கார்-டிரக் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் கார் மீது டிரக் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2023-05-04 04:14 GMT

கோப்புப்படம்

பலோட்,

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் கார் மீது டிரக் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக நேற்று இரவு தம்தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்-பட்கான் கிராமத்தைச் சேர்ந்த சிலர், கன்கேர் மாவட்டத்தின் மார்கடோலா கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை 30-ல் புரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்தாரா கிராமத்திற்கு அருகில் வந்த போது அவர்களது கார், டிரக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய டிரக் டிரைவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்