சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்ய 1.07 லட்சம் பக்தர்கள் முன்பதிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்ய 1.07 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-09 04:28 GMT

சபரிமலை,

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.

நவம்பர் 16-ந் தேதி நடை திறந்த முதல் தினசரி சராசரியாக 50 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று (வியாழக்கிழமை) 96 ஆயிரத்து 30 பேர் தரிசனம் செய்ய முன்புதிவு செய்ததில் 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்ய 1.07 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மண்டல பூஜை தொடங்கிய பிறகு முதல் முறையாக 1 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் இன்று முன்பதிவு செய்துள்ளனர். நடை திறந்து 23 நாட்களில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 321 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்