கேம் விளையாட செல்போன் தர மறுத்ததால் சகோதரியுடன் சண்டை - விரக்தியில் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

கேம் விளையாட சகோதரி செல்போன் தராததால் விரக்தியில் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-08-07 16:00 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கிருஷ்ணாகஞ்ச் மாவட்டம் கடடங்கா பகுதியை சேர்ந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். 10 வயதான இரட்டை குழந்தைகள் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இதனிடையே, இரட்டை சிறுமிகள் இன்று தன் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சிறுமி செல்போனை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். மேலும், செல்போனை தரவும் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்றொரு சிறுமி விரக்தியில் வீட்டின் அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமி வெகுநேரமாகியும் அறைக்குள் இருந்து வெளியே வராததை உணர்ந்த பெற்றோர் அறை கதவை திறந்து பார்த்துள்ளனர். அங்கு சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்