டெல்லி: வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றிய கால்செண்டர் ஊழியர்கள் கைது

வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றிய கால்செண்டர் ஊழியர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-24 19:03 GMT

நொய்டா,

கால்செண்டர் ஊழியர்கள் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று டெல்லியில் இருந்துகொண்டு வேலை இல்லாதவர்களை குறிவைத்து, வேலை வாங்கித்தருவதாக கூறி பலரை ஏமாற்றி பணம் பறித்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதியில் அவர்களிடம் இருந்து ஏமாற்றம் அடைந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், இந்த மோசடியை போலீசார் கண்டுபிடித்ததாக, கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (நொய்டா) ரன்விஜய் சிங் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பவன் குமார், ஜிதேஷ் குமார், ராம் கிஷன், தீபேந்திர குமார், பிரதீப் குமார் சிங், அரவிந்த் குமார் யாதவ், தேஜ்பால் சிங், ரோஹித் குமார், சுபாஷ் சந்திரா மற்றும் ராம் கிருஷ்ணா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கும்பல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயல்படத் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 50 பேரை ஏமாற்றி ரூ. 20 கோடிக்கு மேல் குவித்திருக்கலாம் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏழு மடிக்கணினிகள், 17 மொபைல் போன்கள் மற்றும் ரூ. 6.74 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..

 

Tags:    

மேலும் செய்திகள்