10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்

10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-11-07 05:45 GMT

பெங்களூரு: பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பெங்களூரு கே.பி.அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிபிரசாத், சிக்கஜாலா இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ண ரெட்டி, மைகோ லே-அவுட் இன்ஸ்பெக்டர் கிரீஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, விதானசவுதா இன்ஸ்பெக்டர் குமாரசாமி உள்பட 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து கர்நாடக போலீஸ் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று உடனடியாக அமலுக்கு வந்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்