கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.1½ கோடி நிவாரணம்

பி.எம்.டி.சி. பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.1½ கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என்று பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-10-24 18:45 GMT

பெங்களூரு:

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலை சேர்ந்தவர் ஷில்பா(வயது 21). இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கணிதம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பி.எம்.டி.சி. பஸ்சில் ஏற முயன்றபோது டிரைவர் பஸ்சை முன்நோக்கி இயங்கியதால் ஷில்பா தவறி விழுந்தார். அப்போது அவர் மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த ஷில்பா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவி ஷில்பாவின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ.1½ கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இந்த நிவாரண பணத்தை 3 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நிவாரணம் வழங்காவிட்டால் வரும் நாட்களில் தீவிர போராட்டம் நடத்துவோம் என்றும் மாணவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்