தெலுங்கானாவில் நகராட்சி வருவாய் அதிகாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்

தெலுங்கானாவில் நகராட்சி அதிகாரி நரேந்தர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-08-10 04:14 GMT

ஐதரபாத்,

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகராட்சியில் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் நரேந்தர். வருமானத்திற்கு அதிகாமக இவர் சொத்துக்களை குவித்ததாக இவர் மீது புகார்கள் வந்தன. இதையடுத்து, நிஜாமாபாத் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை நரேந்தர் வீட்டிலும், நிஜாமாபாத் நகராட்சி அலுவலகத்திலும், நரேந்தரின் உறவினர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்துகள் சேர்த்துள்ள விவரம் தெரிய வந்தது.

நரேந்தரின் வீட்டில் ரூ.2.93 கோடி ரொக்கம், ரூ.1.98 கோடிமதிப்புள்ள 17 வீட்டு மனைப்பட்டாக்கள் அவரது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1.10 கோடியும், லாக்கரில் தங்க நகைகளையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நரேந்தரை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கைது செய்தனர். நகராட்சி அதிகாரி வீட்டில் இவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்