அகழாய்வு பணி: கொந்தகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. கொந்தகை பகுதியில் 3-வதாக மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரிய வந்துள்ளது.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் கொந்தகையில் ஏற்கனவே 2 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது:-
கொந்தகை பகுதியில் 3-வதாக மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உருவான ஈரப்பதத்தால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் முழு எலும்புக்கூட்டை எடுப்பதில் சிரமம் உள்ளது. ஈரப்பதம் நன்கு காய்ந்த பின்னர் தான் இந்த எலும்புக்கூட்டின் முழு வடிவம் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தொல்லியல் ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.