பழுதடைந்த நிலையில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை சீர்செய்த பொதுமக்கள்
பழுதடைந்த நிலையில் இருந்த கீழக்காவட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை பொதுமக்கள் சீர் செய்தனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அரசாங்கத்தின் முக்கிய கோப்புகள் எல்லாம் மழை பெய்யும் நேரங்களில் கட்டிடங்களுக்குள் மழைநீர் ஒழுகி நனைந்து கொண்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கிராம நிர்வாக அதிகாரி கட்டிடத்தை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கொரோனா காலம் என்பதனாலோ, என்னவோ கிராம நிர்வாக அதிகாரி கட்டிட புனரமைப்புக்கு மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பின்னர் கிராம மக்கள் பலரும் தங்களால் ஆன பங்களிப்பாக நிதி உதவி அளித்து அந்த கட்டிடத்தை சரி செய்து தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அதிகாரி கட்டிடம் கட்ட அரசை எதிர்பார்த்து பிரயோஜனமில்லை. நம்மால் முடிந்த உதவிகளை செய்து நாமே புதுப்பித்துக்கொள்வோம் என முடிவு செய்து சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் ஒழுகும் நிலையில் இருந்த கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு கம்பி வலை பதித்து செங்கல், மணல், ஜல்லி கலவை பயன்படுத்தி சரிசெய்து, ரூ.20 ஆயிரம் மதிப்பில் தரைத்தளத்தில் டைல்ஸ் பதித்தும் முற்றிலும் சேதமடைந்திருந்த மின் வயர்களை முழுமையாக மாற்றி மழை பெய்தால் தண்ணீர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்குள் புகும் நிலையை மாற்றி சீரமைத்துள்ளோம்.
மேலும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு தரமான பீரோ ரூ.10 ஆயிரம் மதிப்பில் வாங்கித் தந்துள்ளோம் என்றனர். இந்த காலத்திலும் அரசாங்கத்தை எதிர்பாராமல் கிராம மக்கள் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.