‘அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்’ கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் அபிஷேக் பச்சன் வேண்டுகோள்

‘அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்’ என கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2020-07-12 22:30 GMT
மும்பை, 

‘அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்’ என கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபிஷேக் பச்சன்

மும்பை ஆஸ்பத்திரியில் தனது தந்தை அமிதாப் பச்சனுடன் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நடிகர் அபிஷேக் பச்சன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வார்கள். இதுபற்றி மும்பை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

எச்சரிக்கையாக இருங்கள்

எனது தாய் உள்பட குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு இந்த நோய் தொற்று இல்லை. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. டாக்டர்கள் அடுத்து முடிவு எடுக்கும் வரை நானும், எனது தந்தையும் ஆஸ்பத்திரியிலேயே இருப்போம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தயவு செய்து அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்