60 வயதிற்கு மேற்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்த கூடாது; கலெக்டர் உத்தரவு
60 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என்று கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,
அதேபோல் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் அடையும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களை எந்த விழாவிற்கும் அழைக்க கூடாது. அவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்த கூடாது என்று கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்துதுறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவுதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மின்னல் வேகத்தில் மதுரையில் கொரோனா பரவி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து தினமும் 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் மதுரை மாவட்டத்தில் 2.6 சதவீதமாக உள்ளது. சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் பிரச்சினை போன்ற நோய் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதேபோல் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் அடையும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களை எந்த விழாவிற்கும் அழைக்க கூடாது. அவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்த கூடாது என்று கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்துதுறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அனைத்து துறை அலுவலகங்கள் மூலம் நடைபெறும் அரசு விழாக்கள், நிகழ்வுகள் ஏதேனும் அத்தியாவசியம் கருதி நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த விழாவிற்கு கீழ்கண்ட வகையினரை அழைக்க கூடாது. அதன்படி 60 வயதிற்கு மேற்பட்டோர், நோய் உள்ளோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள். இந்த பிரிவினை சேர்ந்த எவருக்கேனும் பயன்கள் அளிக்க வேண்டி இருந்தால், அந்த பயன்களை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும்.
மேலும் அரசு துறை அலுவலகங்களில் வெளிமுகமை (காண்டிராக்ட்டு அல்லது ஒப்பந்தம்) மூலம் பணிபுரியும் காவலர், துப்புரவு பணியாளர்கள் போன்ற 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு பணி வழங்க கூடாது. அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். 60 வயதிற்கு உட்பட்ட உள்ள நபர்களை மட்டுமே இந்த பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.