கிராமங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை கவர்னர் வேதனை

கிராமப் புறங்களில் மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-11 22:30 GMT
புதுச்சேரி, 

கிராமப் புறங்களில் மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வழிமுறை

புதுச்சேரி கவர்னர் கிரண் பெடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதா வது:-

களஆய்வாளர்கள் தருகின்ற தகவல் அறிக்கைகள் கடைக் காரர்கள், பொதுமக்கள் யாரையும் குற்றம் சாட்டு வதற்காக இல்லை. அவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்து வதற்காக தான். சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கும்படி வலியுறுத்துவதின் அவசி யத்தை கடைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நோயாளிகள் இப்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு வழிமுறை களை பின்பற்ற தொடங்கி விட்டனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் பின்பற்றுவதில்லை.

நம்முடைய அரசின் கவனம் முழுவதும் நகரப் பகுதிகளிலும், முக்கியமான சாலைப் பகுதி களிலும் மட்டுமே உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் யாரும் பாதுகாப்பு நெறிமுறை களை பின்பற்றுவதில்லை. அவர்களை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பரிசோதனை செய்து கொரோனா தொற்று உறுதி யானவர்களை தனிமைப் படுத்தி இந்த சமூகம் அவர் களை ஓரங்கட்டுவதாகவும் கருதுகின்றனர்.

இயல்பு வாழ்க்கை

மக்கள் தங்களுக்கு நோய் அறிகுறிகள் (காய்ச்சல், வறட்டு இருமல்) இருந்தாலும் வெளியே செல்ல தயங்கு கின்றனர். எனவே அவர்களாகவே மருந்து எடுத்துக் கொள்கின்றனர். எனவே மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை செய்தித்தாள்கள், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும். கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை பெறுவதால் விடுபடமுடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் வளர்க்க வேண் டும்.

கடந்த சிலவாரங்களில் நாங்கள் மேற்கொண்ட களஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை இவை. இந்த இக்கட்டான காலகட்டத்தில் மற்றவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பை வழங்கிய நிர்வாகத் திற்கு என்னுடை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் கொரோனா வைரசை வென்று மக்கள் மீண்டும் தங்களுடைய 100 சதவீத இயல்பு வாழ்க்கையை திரும்புவார்கள். உள்ளாட்சித் துறை, கிராமப்புறத்தில் உள்ள போலீசார், தொழிலாளர், வருவாய் அதிகாரிகள், மீன்வள அதிகாரிகள் அனைத்து மத ஆலயங்களிலும், போக்குவரத்து துறைகளிலும் கண்காணிப்பு பணிகள் மற் றும் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்