குடிநீர் தொட்டி கட்டும் விவகாரம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
அவினாசி அருகே குடிநீர் தொட்டி கட்டும் பணியை நிறுத்தக்கூடாது என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி பகுதியில் 6 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகான ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அங்கு மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக கருவலூர் கிழக்கு வீதியில் தோப்புக் கருப்பராயன் கோவில் வளாகத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும், தற்காலிகமாக பணியை நிறுத்தி வைக்குமாறு ஒரு தரப்பு சார்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் 6-வது வார்டு உறுப்பினர் வாணி மகேஸ்வரி நேற்று ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இதையறிந்த மற்றொரு தரப்பினர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் குடிநீர் தொட்டி அதே இடத்தில்தான் அமைய வேண்டும். எனவே எக்காரணம் கொண்டும் கட்டுமான பணியை நிறுத்தக் கூடாது என்று கூறி திரளான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வந்து மாலை 5 மணியளவில் கருவலூர் மேட்டுப்பபாளையம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவலறிந்து அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கருவலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.