ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிய அகதி கைது உதவியவரும் சிக்கினார்

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்ற அகதி கைது செய்யப்பட்டார். அவர் தப்பிச் செல்ல உதவிய விஜய் என்பவரும் போலீசில் சிக்கினார்.

Update: 2020-07-09 02:49 GMT
ராமேசுவரம்,

திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் கடந்த 1-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்றின் மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இலங்கை பகுதியில் ரோந்து சென்ற அந்நாட்டு கடற்படையினர் சுரேசை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அப்போது ராமேசுவரத்தில் இருந்து ராக்லாண்ட் என்பவருக்கு சொந்தமான படகில் தப்பி வந்ததாகவும், இதற்கு ராமேசுவரம் மல்லிகை நகரை சேர்ந்த விஜய் என்பவர் ஏற்பாடு செய்ததாகவும், இதற்காக அவரிடம் ரூ.45,000 கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைது

இது பற்றிய தகவல் ராமேசுவரம் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் மல்லிகை நகரை சேர்ந்த விஜயை கைது செய்து துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள படகு டிரைவர் டல்பின்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்