செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது.;

Update: 2020-07-08 23:02 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருள் நகரை சேர்ந்த 46 வயது ஆண், பொத்தேரி எஸ்.ஆர்.எம். நகர் மகாத்மா காந்தி சாலையை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர், ஊரப்பாக்கம் கோதண்டராமர் தெருவை சேர்ந்த 35 வயது வாலிபர், யமுனை நகரில் வசிக்கும் 33 வயது இளம்பெண், 13 வயது சிறுமி , மறைமலைநகர் ரெயில் நகரில் வசிக்கும் 41 வயது பெண், 44 வயது ஆண் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியானது. இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் 273 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,215 ஆக பதிவானது. இவர்களில் 4,045 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று 78 வயது, 62 வயது மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஷண்முக நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது 2 வாலிபர்கள் மற்றும் படப்பை ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயது ஆண், மணிமங்கலம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 49 வயது பெண், 43 வயதுடைய ஆண் மற்றும் ஒரகடம் பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் என நேற்று ஒரே நாளில் 133 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,970 ஆக பதிவானது. இவர்களில் 1,177 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் 1,755 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.

திருவள்ளூர்


திருவள்ளூர், ஈக்காடு, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 300 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 5 ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,457 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 1,939 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 111 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர் .

மேலும் செய்திகள்