கொடுமுடி அருகே காசிபாளையத்தில் 61 பேருக்கு கொரோனா பரிசோதனை
கொடுமுடி அருகே காசிபாளையத்தில் 61 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொடுமுடி,
கொடுமுடி அருகே காசிபாளையத்தில் 61 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனை
கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி சத்திரம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கடந்த 4-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது உறவினர் வீடான கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்துக்கு சென்று வந்துள்ளார். இதனால் காசிபாளையம் பகுதியில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் காசிபாளையத்தில் நேற்று நடந்தது. இதில் 61 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதேபோல் வடக்கு புதுப்பாளையம் பாரதிநகரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கும், 2 பெண்களுக்கும் ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் ஒரு பெண்ணின் 1 வயது குழந்தைக்கும் நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. இதனால் அந்த பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நோட்டீசு
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதியானது. இதைத்தொடர்ந்து அவரது வீடு உள்பட 9 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. அந்த வீடுகளின் முன்பு தனிமைப்படுத்தப்படுவதாக சென்னசமுத்திரம் பேரூராட்சி பணியாளர்கள் நோட்டீசு ஒட்டினார்கள். மேலும், அந்த பகுதியை சேர்ந்த 43 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொடுமுடி வட்டாரத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தொற்று பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.