கொடைக்கானலில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை மீட்பு

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை மீட்கப்பட்டது.

Update: 2020-07-06 00:00 GMT
கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அவ்வப்போது நகரின் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கை ஆகும். அதன்படி கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்திற்குள் நேற்று சில காட்டெருமைகள் வலம் வந்தன.

அப்போது அவற்றில் ஒரு காட்டெருமை அங்குள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதில், மேலே வரமுடியாமல் தவித்த அந்த காட்டெருமை கத்தியது. அதன் சத்தத்தை கேட்ட கல்லூரி நிர்வாகத்தினர், உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுநீர் தொட்டியின் பக்கவாட்டில் குழி தோண்டி, காட்டெருமையை உயிருடன் மீட்டனர். பின்னர் அதை வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர்.

மேலும் செய்திகள்