கொரோனாவை தடுக்க ஊரடங்கு தீர்வல்ல மந்திரி பி.சி.பட்டீல் சொல்கிறார்

கொரோனாவை தடுக்க ஊரடங்கு தீர்வல்ல என்று மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-01 22:30 GMT
பெங்களூரு, 

கொரோனாவை தடுக்க ஊரடங்கு தீர்வல்ல என்று மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா பரவல்

கர்நாடகத்தில் ஊரடங்கு முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா மட்டும் போனபாடில்லை. பொதுமக்கள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது, பொதுஇடங்களுக்கு செல்லும்போது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தேவையின்றி அரசு மீது குறை கூறுகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகத்தில் கொரோனா பரவியது. கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பா எடுத்த நடவடிக்கைகளை காங்கிரசார் பாராட்ட வேண்டும். அவ்வாறு பாராட்டினால் பதவி போய்விடுமோ என அஞ்சி காங்கிரஸ் தலைவர்கள் அரசை குறை சொல்கிறார்கள்.

ஊரடங்கு தீர்வல்ல

கொரோனாவை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை மட்டும், செய்த செலவுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தயாராக உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வு அல்ல.

இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்