தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை
தென்காசி மற்றும் குற்றாலம், செங்கோட்டை பகுதியில் நேற்று காலை வெயில் குறைவாகவே அடித்தது.
தென்காசி,
தென்காசி மற்றும் குற்றாலம், செங்கோட்டை பகுதியில் நேற்று காலை வெயில் குறைவாகவே அடித்தது. பின்னர் மாலை 3.30 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. மிதமாக பெய்த இந்த மழையால் அப்பகுதி குளிர்ச்சியாக காணப்பட்டது. இதேபோல் கடையம், ஆழ்வார்குறிச்சி, கடனாநதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்த ஊர்களிலும் 4 மணிக்கு சாரல் மழை தூறியது.