மாதாந்திர பராமரிப்பு பணி: அரசரடி, ஆரப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சார நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அரசரடி, ஆரப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மதுரை,
மதுரையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்பட உள்ளது. இதன்படி ஆரப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடை தெரு, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழசித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துரை பகுதி, வடக்குவெளி வீதி தெற்கு பகுதி, புட்டுத்தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின்ரோடு.
மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, ஒரு பகுதி பொன்னகரம், ஒர்க்ஷாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறுமுகசந்தி, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்குவெளி வீதி, ராஜா மில்ரோடு, ஸ்காட் ரோடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ் ஹவுஸ் வரை மற்றும் எல்.ஐ.சி. அலுவலகம், நேதாஜி தெரு, பாலம் ஸ்டேஷன் ரோடு, அய்யனார்கோவில் மெயின் தெரு, அய்யனார் கோவில் 5-வது தெரு, அய்யனார் கோவில் விலாசம், தாகூர்நகர் பகுதி, மகான் காந்தி ரோடு, மேற்கு பகுதி அகிம்சாபுரம், மேலத்தெரு மற்றும் முதல் தெரு, அகிம்சாபுரம் 1 முதல் 8 தெரு, முத்துராமலிங்கபுரம், இருதயராஜபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
அரசரடி துணை மின் நிலையம்
மதுரை அரசரடி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான சம்பட்டிபுரம் மெயின்ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக் நகர் 4 முதல் 16 தெரு, தேனி மெயின்ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச் சாலை, வ.உ.சி.மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக் நகர் 1 முதல் 3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேலபொன்னகரம் 2, 3 மற்றும் 10 தெரு, கனரா வங்கி முதல் டாக்சி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5 தெரு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம்.
எஸ்.எஸ். காலனி பகுதி, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1 முதல் 5 தெரு, சொக்கலிங்கநகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம். பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர், குட்செட் ரோடு, மீனாட்சி பஜார், தெற்கு மண்டல அலுவலக பகுதி. பொன்மேனி மற்றும் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.
இலந்தைகுளம்
மேலும் இலந்தைகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, வளர்நகர், அம்பளக்காரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடர்ன், ராம்நகர், பி.எம்.நகர் மற்றும் ஆதிஈஸ்வரன் நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.