திருச்சியில் இடி-மின்னலுடன் பலத்த மழை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
திருச்சியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.;
திருச்சி,
திருச்சியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
கடந்த மாதம் 28-ந் தேதியுடன் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்றும் பகல் நேரத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. இதனால், பகலில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தநிலையில் நேற்று மாலை 3 மணியளவில் மாநகரில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சற்று நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால், திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை நீர்
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழைநீர், சாக்கடை கால்வாயில் கலந்து நிரம்பி சாலையிலும் சில இடங்களில் ஓடியது. திடீர் மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், பஸ்சுக்காக காத்து நின்றவர்கள், நடந்து சென்றவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். இந்த மழை காரணமாக இரவு குளிர்ச்சி நிலவியது. இந்த மழையால் மக்களின் மனமும் குளிர்ந்தது.