திருப்பூரில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் பயணம்

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் சென்றனர்.;

Update: 2020-06-04 05:50 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள்.

அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி ஒடிசாவிற்கு நேற்று இரவு ஒரு சிறப்பு ரெயில் திருப்பூரில் இருந்து சென்றது. இதில் 1,600 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதிக்கப்பட்டது. ரெயிலில் சென்றவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்