நாகையில் ரூ.77 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் அதிகாரி ஆய்வு

நாகையில் ரூ.77 லட்சத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மேலாண்மை இயக்குனர் சத்யகோபால் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-06-04 00:07 GMT
நாகப்பட்டினம், 

நாகையில் ரூ.77 லட்சத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மேலாண்மை இயக்குனர் சத்யகோபால் ஆய்வு மேற்கொண்டார்.

குடிமராமத்து பணிகள்

நாகப்பட்டினம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளைதமிழ்நாடு நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சத்யகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து திருக்குவளை வட்டம் சூரமங்கலம் கிராமத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சந்திரநதி நெடுகை 3 கி.மீ. முதல் 18 கி.மீ. வரை மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் சினையாங்குடி, பையூர், நெல்லடி, பண்டாரவாடை, வாழக்கரை இயக்கு அணை புனரமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

மதகு புனரமைக்கும் பணி

பின்னர் கீவளூர் வட்டம் வெண்மணச்சேரி் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் சீராவட்டனார் வடிகால் இடதுகரையில் அமைந்துள்ள கொன்னயடி வாய்க்கால் தலைப்பு மதகு புனரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், உதவி கலெக்டர்(பயிற்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணப்பன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் முடிகொண்டான் ஆறு தூர்வாரும் பணி, நரிமணம் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வளப்பார் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சன்னமங்கலம் தலைப்பு, மதகு மறுகட்டுமானம் செய்யும் பணிகளை மேலாண்மை இயக்குனர் சத்யகோபால், நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது திருமருகல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமேனி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்