சேலத்தில் இருந்து திருவாரூர் வந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா வைரசை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர்,
தமிழகத்தில் கொரோனா வைரசை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சேலத்தி்ல் இருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு எம்.எஸ். படிக்க வந்த டாக்டர் ஒருவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால்் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.