ரசிகர் எழுதிய உருக்கமான கடிதம் : பாராட்டிய டோனி

சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்';

Update:2022-05-18 12:04 IST
Image Courtesy : CSK Twitter
மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. 

இந்த தொடரில் சென்னை அணி 13 போட்டியில் விளையாடி 4 ல் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது .இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்'

 அதில் தோனி மீதான தனது அன்பும் , கேப்டன் டோனி  வாழ்க்கையில் ஏற்படுத்திய தனிப்பட்ட தாக்கத்தையும் அந்த ரசிகர் உருக்கமாக  வெளிப்படுத்தி இருந்தார்.

இதனைப் பார்த்த டோனி , அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். 'நன்றாக எழுதப்பட்டுள்ளது . வாழ்த்துகள்' என்று எழுதியதோடு, அதில் கையெழுத்தும் போட்டுள்ளார்.

இதனை சென்னை அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது 

மேலும் செய்திகள்