மோசமான பேட்டிங் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரில் கோலிக்கு ஓய்வு ?- வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கோலிக்கு ஓய்வு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-27 12:51 GMT
Image Courtesy : AFP
மும்பை,

15வது ஐபிஎல் சீசன் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு நீண்ட காலம் இல்லை என்பதால் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் மோசமான பேட்டிங் இந்திய அணி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 2 டக் அவுட்களும் அடங்கும்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி மோதுகிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தேர்வுக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோலி மோசமான பேட்டிங்கில் இருந்து மீண்டு அவரது விளையாட்டில் மேலும் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை பிசிசிஐ எடுக்கவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்