மனைவி பற்றிய ரசிகரின் கேள்விக்கு புவனேஷ்குமார் அளித்த சுவையான பதில்...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் தனது மனைவி பற்றிய ரசிகரின் கேள்விக்கு சுவையான பதிலளித்து உள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார். இவரது மனைவி நுபுர். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு புவனேஷ்குமார் இன்று சுவையாக பதில் அளித்துள்ளார். அவரிடம் ஒரு ரசிகர், இந்த உலகில் எவற்றையேனும் உருமாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? என கேட்டுள்ளார்.
அதற்கு அவர், உலகம் நன்றாகவே இருக்கிறது. மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை என கூறியுள்ளார்.
இதேபோன்று மற்றொரு ரசிகர், முதல் சம்பளம் எவ்வளவு? அதனை வைத்து என்ன செய்தீர்கள் என ஞாபகம் இருக்கா? என கேட்டுள்ளார்.
ரூ.3 ஆயிரம் வாங்கினேன். பின்பு கடைக்கு சென்று எனக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டேன். ஒரு குறிப்பிட்ட தொகையை எனது சேமிப்பிலும் வைத்து கொண்டேன் என பதிலளித்து உள்ளார்.
அவரிடம் மற்றொரு ரசிகர், உங்களுடைய மனைவி நுபுர் பற்றி ஒரு சில வார்த்தைகளில் கூறுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு மகிழ்ச்சியுடனும், நகைச்சுவையுடனும் பதிலளித்துள்ள புவனேஷ்குமார், அறிவார்ந்தவர். பன்முக செயலாற்றல் கொண்டவர். அவர் ஒரு நாய் பிரியர். சில சமயங்களில் அவர்கள் எனக்கு முன் வந்துவிடுவார்கள் என கூறியுள்ளார்.
இதேபோன்று ரசிகர் ஒருவர், உங்களை பற்றி மீம்கள் வரும்பொழுது உங்களது பதில்வினை என்னவாக இருக்கும் என கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் சிரித்து விடுவேன் என கூறியுள்ளார்.