அவுட் என விரலை தூக்கி தொப்பியை சொறிந்த நடுவரின் காமடி
ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியில் நியூசிலாந்து நடுவர் கிறிஸ் கேபனி செய்த காமடி அனைவரையும் சிரிக்க வைத்தது.;
ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா இரட்டை சதமும், சஹா சதமும் அடித்து அசத்தியுள்ளனர்.
இந்திய வீரர் புஜாரா 142 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய பந்தை விளாச முயற்சித்தார்.
ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டின் கையில் சிக்கியது. விக்கெட் கீப்பரோ, பந்து வீசிய ஹேசில்வுட்டோ அவுட் கேட்டு அப்பீல் செய்யவில்லை.
அதற்குள் நடுவர் கிறிஸ் கேபனி அவுட் என்பது போல் விரலை உயர்த்த தொடங்கினார். பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்யாததால் சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக தூக்கிய விரலை அப்படியே தொப்பி மீது சொறிந்தபடி சமாளித்து விட்டார்.
நடுவரின் காமடியை கண்டு பலர் சிரித்து விட்டனர். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Umpire Chris Gaffaney looked set to give #Pujara out on day 4 in Ranchi, but a half-hearted appeal may have changed his mind. 😂😂 #IndvAus 🏏 pic.twitter.com/CfNrkxhYlI
— AmMaD (@AmmadZahid) March 19, 2017