என் கன்னித்தன்மையை சீரழித்து மகளை நடிகையாக்கினார்...! பிரபல நடிகர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்

நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்று தான் தனது மகளை நடிகையாக மாற்றினார் என்று பிக் பாஸ் பிரபலம் பூஜா மிஸ்ரா, பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Update: 2022-05-12 10:18 GMT

மும்பை

சத்ருகன் சின்காவின் மகள் தான் நடிகை சோனாக்ஷி சின்கா. ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர். இதையடுத்து, கடந்த  2010 ஆம் ஆண்டு தபாங் படத்தின்மூலம் பாலிவுட்டில்  அறிமுகமானார்.   அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். 

இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. சோனாக்ஷி சின்கா, தமிழில் 2014 ஆம் ஆண்டு  ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில்,  சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா வைத்துள்ள குற்றச்சாட்டில் பாலிவுட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியுள்ளது. 

 பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா மீதும் அவரது மனைவி மீதும்  கடுமையான குற்றச்சாட்டை வைத்து உள்ளார்.

பூஜா மிஸ்ரா கூறி இருப்பதாவது:-

என் தந்தையும் சத்ருகன் சின்காவும் நல்ல நண்பர்களாக இருந்தபோது, சத்ருகன் மனைவி என் தந்தையை மூளைச்சலவை செய்துள்ளார். பாலிவுட்டில், விபசாரம் செய்தால் தான் பிழைக்க முடியும் என்று கூறி,  என்னை சினிமா துறையில் நுழைய விடாமல் தடுத்து விட்டார். இதனால், என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன்.

பின் என் தந்தை 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். அதன்பிறகு அவர் புனேவிற்குச் சென்றுவிட்டார். ஆனால், என்னை சத்ருகன் சின்காவும் அவர் மனைவியும் மும்பையில் தொடர்ந்து தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்கள்

நடிகர் சத்ருகன் சின்கா எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என்னை மயக்கமடையச் செய்து என்னை வைத்து பாலியல் தொழில் செய்து இருந்தார். இதனால் எனது கன்னிதன்மையை விற்பனை செய்து பேஷன் டிசைனராக இருந்த தன் மகளை நடிகையாகினார்.

தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் என்னை குறித்து சத்ருகன் சின்காவும் அவரது மனைவி பூனம் சின்காவும் பல்வேறு பாலியல் மோசடி செய்து உள்ளனர். இதற்காக என்னை மயக்கமடைய வைத்து, எனக்கு சூனியம் வைத்துள்ளனர்.  

 சத்ருகன் சின்காவும், அவர் மனைவியும் சேர்ந்து என்னிடமிருந்து 35 படங்களைத் திருடி உள்ளனர்.  மொத்தத்தில் சத்ருகன் சின்கா குடும்பம் ஒரு பேராசை பிடித்தது. அதுமட்டும் இல்லாமால் சத்ருகன் சின்காவும், அவர் மனைவியும் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எனது ஸ்பான்சர்களின் பட்டியலைத் திருடிவிட்டனர். 

ஒரு முறை சத்ருகன் சின்காவின் பிறந்த நாளுக்கு நான் சென்ற போது எனக்கு எதையோ கொடுத்து சாப்பிடச் செய்து பில்லிசூனியம் வைத்தனர். 

நான் சிங்கப்பூரில் ஷாப்பிங் முடித்து வந்தால் போதும் அவர்கள் அந்தப் பொருட்களைத் திருடிவிடுவர்கள்.  சத்ருகன் சின்காவால் தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் பாலிவுட்டில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் சத்ருகன் சின்காவைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதனால் நான் என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன் என்று கூறி உள்ளார். 

பூஜா மிஸ்ரா புகாரால் பாலிவுட் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு சத்ருகன் மற்றும் சோனாக்ஷி சின்கா தரப்பிலிருந்து இதுவரி பதில் ஏதும் அளிக்கவில்லை.

மேலும் செய்திகள்