ஆண் மயிலுடன் நடனம் ஆடி பரவசப்படுத்திய நடிகை ஷெனாஜ் கில்

நடிகை ஷெனாஜ் கில் தோகை விரித்து ஆடிய ஆண் மயிலுடன் நடனம் ஆடி பரவசப்படுத்தினார்.

Update: 2022-05-09 09:12 GMT

புனே,



இந்தி திரையுலகை சேர்ந்த நடிகை ஷெனாஜ் கில் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில் திறந்த புல்வெளி பகுதியில் ஆண் மயில் தோகை விரித்தபடி நிற்கிறது.  அதன் அருகே நிற்கும் நடிகை ஷெனாஜ் கில், ஆண் மயிலுக்கு இணையாக தனது கைகளை கீழிருந்து, மேலாக கொண்டு சென்று பின் கரங்களை வளைத்து புன்முறுவல் காட்டினார்.

நாட்டின் தேசிய பறவையான ஆண் மயில் நீண்ட தோகையை கொண்டிருக்கும்.  சில சமயங்களில், அது தனது தோகையை விரித்தபடி நடனம் ஆடுவதும் உண்டு.  அதன் நடனத்திற்கேற்ப, நடிகை ஷெனாஜ் கில்லும் நடனம் ஆடுவது போல் மேற்கொண்ட முயற்சியை வீடியோ பதிவாக வெளியிட்டு உள்ளார்.

அதற்கு ரசிகர்கள் பலவித விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.  அவர் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளார் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.  மற்றொருவர், அழகாக உள்ளார்.  அவர் மேல வச்ச கண் வாங்க முடியவில்லை என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மற்றொரு வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.  நடிகை ஷெனாஜ் ஆண் மயில் ஒன்றுக்கு தனது கைகளால் உணவு வழங்குகிறார்.  மிக எளிய முறையில் நேர்த்தியாக உடையணிந்தபடி அந்த வீடியோவில் காட்சி தருகிறார்.

அவர் நடிகர் சல்மான் கானுடன் சேர்ந்து கபி ஈத் கபி தீவாளி என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது இந்தியில் அவர் அறிமுகம் ஆகும் படம் ஆகும்.

மேலும் செய்திகள்