சினிமா துறையில் 2 டான்கள்; 'டான்' டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சினிமா துறையின் இரண்டு டான்கள் உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-05-06 15:16 GMT
சென்னை,

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அவரை சிவகார்த்திகேயன் கட்டித்தழுவி வரவேற்றார். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சினிமா துறையில் இரண்டு டான்கள் இருப்பதாக கூறினார். அதில் ஒன்று சிவகார்த்திகேயன் என்றும், மற்றொன்று இசையமைப்பாளர் அனிருத் என்றும் அவர் கூறினார். 

மேலும் செய்திகள்