நடிகர் அஜித்-க்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

அஜித்துக்கு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2022-05-03 14:26 GMT
சென்னை ,

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இந்நிலையில் அஜித்துக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார் ..

அதில், நடிகர் அஜித்குமாரிடம்  கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்