"கங்கனாவுடன் பணியாற்றும் போது பயமாக உணர்ந்தீர்களா ?" - பிரபல நடிகர் சுவாரசிய பதில்..!!
கங்கனா உடன் பணியாற்றியது குறித்து முன்னணி நடிகர் சுவாரசிய பதில் அளித்துள்ளார்.
மும்பை,
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். தனது கருத்துக்களால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதில் பெயர் போன இவர் தற்போது தயாரிப்பாளர்கவும் உருவெடுத்துள்ளார்.
சமீபத்தில் கூட சமஸ்கிருதம் மொழி குறித்து பேசிய இவர், "கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி போன்ற மொழிகளை விட சமஸ்கிருதம் பழமையானது. இந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்திருக்கலாம். பின்னர் ஏன் நமது நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க கூடாது..?" என கேள்வி எழுப்ப இதற்கு தென்னிந்தியாவில் பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்தனர்.
கங்கனா தயாரித்துள்ள முதல் திரைப்படத்தில் பாலிவுட்டின் மற்றொரு முன்னனி நடிகர் நவாஸுதீன் சித்திக் நடித்துள்ளார். இந்த நிலையில் கங்கனாகுறித்து சமீபத்தில் பேசிய நவாஸுதீன் சித்திக் கூறுகையில், " நான் இதுவரை சேர்ந்து பணியாற்றிய சிறந்த தயாரிப்பாளர்களுள் அவரும் ஒருவர். அவரை போன்ற சிறந்த தயாரிப்பாளர்கள் இங்கு மிகவும் குறைவு " என தெரிவித்தார்.
அவருடன் சேர்ந்து பணியாற்றும் போது பயமாக உணர்ந்தீர்களா என நவாஸுதீன் சித்திக்-யிடம் கேட்டகப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், " ஏன் பயப்பட வேண்டும். அவர் சிறந்த நடிகை மற்றும் தயாரிப்பாளர். அவ்வாறு இருக்க உங்களுக்கு வேறு என்ன வேண்டும் " என தெரிவித்தார்.