தமிழில் சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த சலீம் கவுஸ் இன்று காலமானார்..!
தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் படங்களில் வில்லனாக சலீம் கவுஸ் தனது 70வது வயதில் காலமானார்.
மும்பை,
தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சலீம் கவுஸ்.
இவர் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் திடீரென இன்று உயிரிழந்தார். அவரின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து சலீம் கவுஸ் மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.