இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த கேஜிஎஃப்-2..! மகிழ்ச்சி வெள்ளத்தில் பட தயாரிப்பு நிறுவனம்

படம் வெளியான இரண்டே நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2022-04-16 15:09 GMT
பெங்களூரு, 

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி கடந்த 14 ஆம் தேதி வெளியாகி உள்ளது. 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. தற்போது கே.ஜி.எப் இரண்டாம் பாகம் வெளியான இரண்டே நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இந்தியில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் சூறாவளி வசூலால், மகிழ்ச்சி வெள்ளத்தில் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

மேலும் செய்திகள்