ஆர்ஆர்ஆர் படம் ராஜமெளலி மீது கோபம் : நடிகை அலியா பட் மறுப்பு

ஆர்ஆர்ஆர் படத்தில் எனது அனுபவத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்பினேன்" என நடைகை அலியாபட் கூறி உள்ளார்.

Update: 2022-04-01 05:33 GMT
மும்பை

 பிரபல டைரக்டர் ராஜமெளலி இயக்கத்தில் ரூ.400 கோடி தயாரிப்பில் உருவான  ஆர்ஆர்ஆர்  படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆரை மாஸாக காட்டிய  இயக்குனர் அலியா பட்டை  காட்சிகளை சுருக்கி விட்டதாக கூறபட்டது. 

எங்கேப்பா என  ரசிகர்கள் தேடும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறிதாக வந்து சென்றது. அலியா பட் ரசிகர்களை மட்டுமின்றி அலியா பட்டையும் ரொம்பவே கோபத்தில் இருப்பதாக கூறபட்டது.

தென்னிந்திய திரையுலகில் 'ஆர்ஆர்ஆர்' முதல் படம். ஆனால், இதில் அவர் எதிர்பாராத்ததுபோல் பெரிய கதாபாத்திரம் இல்லை. படத்தில் மொத்தமே ஏழு சீன்கள் அளவுக்கே அவருக்கு காட்சிகள். அதிலும், ஒரு காட்சியில் மட்டுமே பெரிய டயலாக் கொடுக்கப்பட்டு இருந்தது.

இதனால் கோபத்தில் இருந்த  நடிகை அலியா பட் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த போஸ்டர்களையும், வீடியோக்களையும்   தூக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. 

ஆனால் இதனை அலியாபட் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறி இருப்பதாவது:-

"இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்செயலான ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என்று அனைவரையும் நான் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் எனது சுயவிவரக் கட்டத்திலிருந்து பழைய வீடியோ இடுகைகளை மறுசீரமைப்பேன், ஏனெனில் அது ஒழுங்கீனமாக இல்லாமல் இருப்பதை நான் விரும்புகிறேன்.

ஆர்ஆர்ஆர் படத்தில்  நான் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் சீதாவாக நடித்ததை விரும்பினேன், நான் ராஜமெளலி சாரால் இயக்கியதை விரும்பினேன் . ஜூனியர் என்டிஆர்மற்றும் ராம்சரண் ஆகியோருடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இந்த படத்தில் எனது அனுபவத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்பினேன்"என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்