உலகை உலுக்கிய ஆரம்பம் ...! ஆர்ஆர்ஆர் பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் எவ்வளவு...?

ஆர் ஆர் ஆர் படம் உலக அளவில் 'சிறப்பான' தொடக்கத்தைப் பெற்றுள்ளது, குறிப்பாக அமெரிக்காவில்.

Update: 2022-03-26 05:55 GMT
சென்னை

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில்  உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதையாகும். இப்படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாக நடிக்கின்றனர். டிவிவி தனய்யா 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்து உள்ளார். அலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆர்படத்தின் இந்தி பதிப்பு, வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, முதல் நாளில் ரூ 18 கோடி வசூலித்துள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.


மேலும் செய்திகள்