"என் கணவரின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க என்னை அனுமதிக்கவில்லை"- பிரபல நடிகை வேதனை
கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க தன்னை அனுமதிக்கவில்லை என பிரபல நடிகை வேதனை தெரிவித்துள்ளார்.
மும்பை,
1970-களில் பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகி ஜீனத் அமன்,70. இவர் உச்சநட்சத்திரமாக நடித்துக்கொண்டு இருந்த காலத்தில் இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள பலர் ஆர்வமாக இருந்தனர். இவரது குடும்ப வாழ்க்கை குறித்து பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களிலும் அவ்வப்போது விவாதம் நடைபெறுவது வழக்கம்.
இவர் 1985 ஆம் ஆண்டு சக நடிகர் மசார் கானை திருமணம் செய்துகொணடார். அவருடன் சேர்ந்து இவர் ‘ஏக் ஹி பூல்’, ‘அங்கார்’ போன்ற திரைப்படங்களிலும், டிவி சீரியலான ‘புனியாத்’விலும் நடித்துள்ளார்.
இவர்களுக்கு தம்பதியருக்கு அசான் மற்றும் ஜஹான் கான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 1998 ஆம் ஆண்டு மசார் கான் இறப்பதற்கு முன்னரே இவர்கள் திருமண வாழ்வில் இருந்து பிரிந்தனர் . மசார் சில போதை மருந்துகளுக்கு அடிமையாகி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ஜீனத் பிரிந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜீனத் தனது கணவருடனான தன்னுடைய இறுதி நாட்கள் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் நடிகை சிமி கரேவாலின் நிகழ்ச்சியில் பேசும்போது " நான் அவரது இறப்புக்கு தயாராக இல்லை. அவருடன் வாழ்வதற்காக நான் கடுமையாகப் போராடினேன். அவருக்கு சிறுநீரகம் கிடைக்கும் என்று நான் நம்பினேன். அவர் வாழ்வார் என்று நம்பினேன்.
இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் நான் எனது கணவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்த அவரது தாயும், சகோதரியும். என்னை அனுமதிக்கவில்லை.
என் வாழ்நாளில் பல வருடங்கள் அவருடன் வாழ்ந்து இருக்கிறேன். அவர் என் குழந்தைகளுக்கு அப்பா என நான் கூறிய போதும் 'இல்லை, இறுதி அஞ்சலிக்கு நீங்கள் வரக்கூடாது அவரது குடும்பத்தார் மறுத்துவிட்டனர் " என ஜீனத் அமன் தெரிவித்தார்.