'அரபிக் குத்து' சாதனையை முறியடித்த 'ஜாலியோ ஜிம்கானா'
அரபிக்குத்து பாடலை தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடலின் புரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் பாடியிருக்கும் ஜாலியோ ஜிம்கானா புரோமோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அரபிக்குத்து பாடலுக்கான புரோமோ வெளியான 24 மணி நேரத்தில் 7.9 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஜாலியோ ஜிம்கானா பாடலின் புரோமோ வெளியான 24 மணி நேரத்தில் அதை விட அதிகமாக 8.1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர். பாடலின் புரோமோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் முழு பாடலை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.