அஜித்தின் 'வலிமை' படத்திற்கு யு /ஏ சான்றிதழ் .!
வலிமை' திரைப்படம் வரும் பிப்ரவரி 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
சென்னை,
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.
'வலிமை' திரைப்படம் வரும் பிப்ரவரி 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்நிலையில் வலிமை' திரைப்படத்திற்கு சென்சாரில் தணிக்கைக்குழு 'யு /ஏ 'சான்றிதழ் வழங்கியுள்ளது.